முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோ சிறையில் கலவரம்: 7 பேர் அடித்துக்கொலை

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      உலகம்
Suicide 2023 04 29

டக்ஸ்பான், மெக்சிகோவில் சிறையில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 7 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு;-

மெக்சிகோ நாட்டில் வெராக்ரூஸ் மாகாணத்தில் டக்ஸ்பன் சிறை உள்ளது. இந்த சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில், கைதிகளுக்கும், கிரிமினல் கும்பலான க்ரூபோ சோம்ப்ராவுக்கும் இடையே கலவரம் மூண்டது. க்ரூபோ சோம்ப்ரா கும்பலானது மற்ற கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த கலவரத்தின் போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். சிறைச்சாலையின் உள்ளே கைதிகள் சிலர் தீ வைத்தனர்.

கலவரத்தில் சிக்கியவர்களில் 7 கைதிகள் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறையில் மூண்ட கலவரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து