Idhayam Matrimony

ரூ.75 ஆயிரத்தை தாண்டிய ஒரு பவுன் தங்கம் விலை..!

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Gold 2025-08-06

Source: provided

சென்னை: ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. 

இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அதற்கு டாலரில் பணம் கொடுக்க வேண்டும். அதன் காரணமாக தினசரி மாறுபடும் அமெரிக்க டாலர் மதிப்பின் ஏற்ற இறக்கமும் தங்கத்தின் விலையில் தாக்கம் கொடுக்கிறது. டாலர் மதிப்பு அதிகரித்தால், அதனாலும் இந்தியாவில் தங்கம் விலை கூடுகிறது.

2025 ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58,000 ஆக இருந்தது. பின்னர், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜூலை 23-ம் தேதி ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை 700 ரூபாய் அளவில் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 6, புதன்கிழமை நிலவரப்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் ஒரு கிராமின் விலை ரூ.9,380 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.75,040 ஆகவும் மீண்டும் புதிய உச்சத்துடன் விற்பனையானது.

அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.10,233 ஆகவும் சவரன் விலை ரூ.81,864 ஆகவும் புதிய உச்சம் கண்டுள்ளது. வெள்ளி விலை கூட புதிய உச்சம் தொட்டுள்ளது. அதாவது, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.126 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,26,000 ஆகவும் இருக்கிறது.

தற்போது 22 காரட் தங்கம் விலை பவுன் ரூ.75,000-ஐ தாண்டி இருப்பது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 25 சதவீத வரி காரணமாக, இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88-ஐ நெருங்கும் அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. இது, தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

சர்வதேச பொருளாதார பின்னடைவுகள், பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், பெரிய முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை உயர்ந்து ஆபரணத் தங்கம் விலைவும் விண்ணை முட்டியிருக்கிறது. இந்த விலை உயர்வுப் போக்கு தொடரும் என அஞ்சப்படுகிறது.

அத்துடன், ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்த நாட்களில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடைபெறும் என்பதால் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் வரும் நாட்களிலும் தங்கம் விலை உயரவே வாய்ப்புள்ளது. குறிப்பாக, நடப்பாண்டு, அதாவது 2025 இறுதிக்குள், ஒரு கிராம் ரூ.10,000 எனவும், ஒரு சவரன் ரூ.80,000 எனவும் தங்கம் விலை உச்சத்தை எட்டக்கூடும் என வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து