Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தொண்டைமான்

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Stalin 2024-12-21

Source: provided

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் அக் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.வில் இணைந்துள்ளார். இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில், புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் நகர்மன்ற முன்னாள் தலைவருமான கார்த்திக் வி.ஆர். தொண்டைமான் அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், தி.மு.க. அயலக அணி மாநிலச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

தி.மு.க.வில் இணைந்தது குறித்து கார்த்திக் தொண்டைமான் செய்தியாளர்களுடன் பேசுகையில், அ.தி.மு.க.வில் மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க. கட்சி போகிற போக்கே சரியில்லை” என்று தெரிவித்தார். தி.மு.க.வில் புதுக்கோட்டை மன்னர் வாரிசு இணைந்திருப்பது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து