எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி: டெல்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் துவாரகா பகுதியில், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்த 22 வெளிநாட்டவரை, அம்மாநில காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் அவர்கள் அனைவரும், இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு, தங்களது தாயகங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடுகடத்தப்பட்டவர்களில், வங்கதேசம் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 8 பேரும், ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த 3 பேரும், லைபீரியாவைச் சேர்ந்த 2 பேரும் மற்றும் செனீகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 22 பேர் தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதில், சிலர் தங்களது விசா காலாவதியான பின்னரும் இந்தியாவில் வசித்து வந்ததாகவும், அவர்கள் அனைவரும் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்ட பின்னர் ஜூலையில் வெளியேற்றப்பட்டதாகவும், துவாரகா காவல் துறை உயர் அதிகாரி அங்கித் சிங் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


