எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பிரேசிலியா: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் டொனால்டு டிரம்பை நான் அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன் என்று பிரேசில் அதிபர் லூலா டா சில்வா தெரிவித்துள்ளார்.
பிரேசில் மீது அமெரிக்கா கூடுதலாக 40 சதவீதம் வரி விதித்தது. இதனால் பிரேசிலிய இறக்குமதிகள் மீதான மொத்த வரி 50 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா பேசியதாவது:-
பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உள்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும். அதிபர் டொனால்டு டிரம்பை நான் அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன். நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அழைப்பேன். புதினால் இப்போது பயணம் செய்ய முடியாததால் நான் அவரை அழைக்க மாட்டேன். நான் பல அதிபர்களுடன் பேசுவேன் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


