எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினும் விரைவில் சந்தக்க உள்ளதாக ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் விரைவில் சந்திக்கக் கூடும் என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இரு தலைவர்களும் சந்திப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், சந்திக்கும் இடம் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் நடைபெறுவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சக ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு புதினைச் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் புதினை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். உக்ரைன் மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதாக புதினை ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்கக் கூடாது என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை ட்ரம்ப் ஒருபுறம் மிரட்டி வரும் நிலையில், இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற இருக்கும் இந்தச் சந்திப்பு உலக அளவில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


