Idhayam Matrimony

பார்லி. மக்களவையில் மணிப்பூர் ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்

வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2025      இந்தியா
Parliament 2023 05 27

Source: provided

புதுடெல்லி : மணிப்பூர் ஜி.எஸ்.டி. திருத்த மசோதா குரல் ஓட்டு மூலம்   நிறைவேற்றப்பட்டது.

பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகிறது. இந்த பிரச்சினையை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்த அமளிக்கு மத்தியில் மணிப்பூர் ஜி.எஸ்.டி. திருத்த மசோதாவை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவையில் தாக்கல் செய்தார். அவர் பேசும்போது, ‘மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருப்பதால் இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு பதிலாக இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது’ என தெரிவித்தார்.  மேலும், இந்த சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் ஜி.எஸ்.டி கவுன்சிலால அங்கீகரிக்கப்பட்ட ஜி.எஸ்.டி திருத்தங்களைச் செயல்படுத்துவதில் மாநிலத்திற்கு சிரமம் ஏற்படும் எனக்கூறிய அவர், இதன் மூலம் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும் என்பதால் இது அரசியலமைப்புச் சட்டத்தின் தேவை என்றும் கூறினார்.

அப்போது எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோது மணிப்பூர் மாநில ஒதுக்கீட்டு மசோதா 2025-ஐ நிதி மந்திரி தாக்கல் செய்தார்.  இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவாறே இருந்தனர். பின்னர் குரல் ஓட்டு மூலம் 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் சபையும் நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து