Idhayam Matrimony

அணியிலிருந்து விடுவியுங்கள்: சி.எஸ்.கே. நிர்வாகத்திற்கு அஸ்வின் திடீர் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Ashwin 1

Source: provided

சென்னை : சி.எஸ்.கே. அணியிலிருந்து தன்னை விடுவிக்க கோரி அந்த அணி நிர்வாகத்திற்கு அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரூ. 9.75 கோடிக்கு...

ஐ.பி.எல். 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. இதன் மூலம் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து சி.எஸ்.கே. அணிக்கு அஸ்வின் திரும்பினார்.

ஏமாற்றம்...

இந்த சூழலில் அஸ்வின் மிகப்பெரிய தாக்கத்தை சி.எஸ்.கே. அணிக்காக ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஏமாற்றத்தை அளித்தார். பேட்டிங் பந்து வீச்சு என இரண்டிலுமே அவரால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. பேட்டிங்கில் 9 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 33 ரன்கள் தான் அடித்து இருந்தார். ஒன்பது போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே ஏழு விக்கெட்டுகளை தான் அவர் கைப்பற்றி இருந்தார்.  

ரசிகர்கள் அதிர்ச்சி...

இந்த தருணத்தில் அஸ்வின் அடுத்த ஆண்டும் சி.எஸ்.கே. அணியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் அணி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு என்னை அணியிலிருந்து விடுவித்து விடுங்கள் என்று கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றது.

 சஞ்சு சாம்சன்... 

இந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே. அணிக்காக வரவுள்ள நிலையில் ராஜஸ்தான் அணி அஸ்வினை மீண்டும் கேட்பதாக தெரிகிறது. இதை அறிந்து கொண்ட அஸ்வின் தான் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு செல்ல இருப்பதாகவும் இதனால் தம்மை விடுவித்து விடுங்கள் என்று அஸ்வின் கூறியதாகவும் தெரிகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து