Idhayam Matrimony

பெங்களூருவில் வந்தே பாரத் ரயில், மெட்ரோ சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      இந்தியா
Modi-2025-08-10

Source: provided

பெங்களூரு : பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து  பிரதமர் மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெங்களூருவிலிருந்து பெலகாவி, அமிர்தசரஸ் முதல் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) முதல் புனே வரை செல்லும் ரயில்கள் இதில் அடங்கும். மஞ்சள் தட மெட்ரொ தவிர, மற்றவை இரண்டும் காணொளி வாயிலாக தொடங்கப்பட்டன. இந்த அதிவேக ரயில்கள்பயண நேரத்தைக் குறைப்பதுடன், பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும் என அதிகாரிகள் கூறினர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பெங்களூருவில் மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவையை பிரதமர் மோடி, நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துள்ளார். இதன் நீளம் 19 கி.மீ.க்கும் அதிகமாகும். 16 நிலையங்களைக் கொண்ட இத்திட்டம் சுமார் ரூ.7,160 கோடி மதிப்புடையது. இந்த மஞ்சள் பாதை திறக்கப்பட்டதன் மூலம், பெங்களூருவில் செயல்பாட்டு மெட்ரோ நெட்வொர்க் தூரம் 96 கி.மீ.க்கும் அதிகமாக அதிகரிக்கும். பெங்களூருவின் தெற்கு மாவட்டங்களில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் புதிய மெட்ரோ பாதையால் பயனடைவார்கள் என்று பா.ஜ.க. தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து