Idhayam Matrimony

பீகார் துணை முதல்வர் பெயரில் இரண்டு வாக்காளர் அட்டை : தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      இந்தியா
Thasv-2025-08-10

Source: provided

பாட்னா : பீகார் மாநில துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக  தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நேற்று (ஆக.10) செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் உள்ள இரண்டு வாக்காளர் அட்டையை அவர் காண்பித்தார். அதில் விஜய் குமார் சின்ஹாவுக்கு பாட்னாவில் உள்ள பங்கிபூர் மற்றும் லக்கிஸராய் தொகுதியில் வாக்காளர் அட்டை இருப்பதாக தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டார். இது தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பிறகு வெளியான வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

“தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் வரைவு பட்டியலில் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவின் பெயர் இரண்டு இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியே போலியானது என நாங்கள் சொல்லி வருகிறோம். துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை இடம்பெற்றது எப்படி? சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியின் நிலை அதிகாரி அவரிடம் கையொப்பம் வாங்கினாரா? இதில் யார் மீது தவறு உள்ளது?

இந்த விவகாரத்தில் விஜய் குமார் சின்ஹா மீது தவறு இருந்தால் அவர் பதவி விலக வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பக்கம் தவறு இருந்தால் மாநில தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு உதவும் கருவியாக தேர்தல் ஆணையம் செயல்படக் கூடாது. எனக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவுக்கு எதிராக அதே நடவடிக்கையை எடுக்குமா?” என தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து