Idhayam Matrimony

மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம் : புதிய திட்டத்துக்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      இந்தியா
CBSE 2023 07-14

Source: provided

புதுடில்லி :  2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறைகளில் சி.பி.எஸ்.இ. பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 9ம் வகுப்பில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் வகையில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

சி.பி.எஸ்.இ. புதிய நடைமுறையின் கீழ் ஒவ்வொரு பருவத்திலும் முக்கிய பாடங்களான மொழிப்பாடம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும். 2026-27 கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான ஒப்புதலை சி.பி.எஸ்.இ. வாரியத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நிர்வாக குழு அளித்துள்ளது.

இத்திட்டம், திறன் அடிப்படையிலான கற்றல் மற்றும் அதனை ஊக்குவிப்பது, மனப்பாடம் செய்வதை குறைப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து