Idhayam Matrimony

இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      இந்தியா
Rajnath-Singh 2024-12-07

Source: provided

போபால் : '' உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ம.பி., மாநிலம் ரைசன் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியா வேகமாக வளர்ச்சி பெறுவதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அதனை விரும்பவில்லை. எப்படி இந்தியா வேகமாக முன்னேறலாம் என கேள்வி கேட்கின்றனர். இந்தியர்களின் கைகளால், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை, மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை விட அதிகமானதாக இருக்க வேண்டும் என பலர் முயற்சி செய்கின்றனர். இதனால், பொருட்கள் விலை உயர்ந்தால் அவற்றை உலக நாடுகள் வாங்காது என நினைக்கின்றனர். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், இந்தியா வேகமாக முன்னேறுகிறது. உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது என்பதை உறுதியுடன் கூறுகிறேன். பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்து 24 நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறோம். இது தான் இந்தியாவின் பலம். அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு கொன்றனர். ஆனால், நாம் யாரின் மதத்தையும் கேட்காமல் கொல்வது என முடிவு செய்தோம். பயங்கரவாதிகள் செய்த செயலை பார்த்து நாம் அவர்களை கொன்றோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து