Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்வர் ராஜா

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM-2-2025-08-10

Source: provided

சென்னை : தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்ட அன்வர் ராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே மீண்டும் கூட்டணி மலர்ந்ததால், அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் கடந்த மாதம் 21-ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க.வில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த 20 நாளில் அவருக்கு தி.மு.க.வில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர், தி.மு.க. இலக்கிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார்.

இந்த நிலையில், தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்ட அன்வர் ராஜா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தி.மு.க. இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி இருந்து வந்தார். அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து