எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : கர்நாடகாவில் தேர்தல் முறைகேட்டை விசாரிக்க சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடகா, மாகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது, "கர்நாடகாவில் 16 இடங்கள் கிடைக்கும் என்று எங்கள் உள் கணக்கெடுப்பு கணித்திருந்தது. ஆனால் எங்களுக்கு ஒன்பது இடங்கள் மட்டுமே கிடைத்தன. நாங்கள் 7 இடங்களில் ஏன் தோற்றோம் என்பதை ஆராய்ந்தோம். குறிப்பாக மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் ஐந்து வெவ்வேறு முறைகள் மூலம் திருடப்பட்டதாக அவர் கூறினார். இதில் போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், படிவம் 6 முறைகேடு செய்தல் ஆகியவை அடங்கும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, "மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு தொடர்பான புகார்களை சட்டத்துறை விசாரிக்கும். அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையை முடித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிடப்படும்" என்று கூறினார்.
.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


