Idhayam Matrimony

ரீ ரிலீஸ் ஆகும் கேப்டன் பிரபாகரன்

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025      சினிமா
Captain-Prabhakaran 2025-08

Source: provided

விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை ஒட்டி சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான், மன்சூர் அலிகான், நாயகி ரம்யா கிருஷ்ணன் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டணர். விழாவில் ஆர்.கே செல்வமணி பேசுகையில், புலன் விசாரணை சமயத்தில் தான் அவரது திருமணம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் நான் அவருக்காக கொண்டு சென்ற கிப்ட் கீழே விழுந்து விட்டது. அதை எடுக்க முயற்சித்த போது, அதை விடுப்பா நீ தான் எனக்கு மிகப்பெரிய கிஃப்ட் என்று என்னை கட்டி அணைத்தார் கேப்டன் என்றார். விஜய பிரபாகரன் பேசுகையில், கேப்டன் நடித்த 156 படங்களில் இனி ஒவ்வொரு வருடமும் அவர் நடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும். இன்றைய திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு கூட அது ஒரு பாடமாக அமையும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து