Idhayam Matrimony

நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும், நாடு முழுவதும் இந்த பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

டெல்லியில் தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட், நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுப்ரீம் கோர்ட்  கூறியதாவது: நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். தெரு நாய் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது. தெருநாய்க்கடி தொடர்பான தகவலை தெரிவிக்க ஹெல்ப்லைனை ஒருவாரத்தில் அமைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து நாய்க்கடி சம்பவங்களும் பதிவு செய்யப்படும்.

ஏதாவது ஒரு தனிநபரோ அல்லது அமைப்போ புகார் அளித்தால் 4 மணி நேரத்தில் தெருநாய்களை பிடிக்க வேண்டும். இதில் யாராவது குறுக்கீட்டு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். அவற்றை விடுவிக்கவும் கூடாது என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து