எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு ரோகித்சர்மாவும், விராட்கோலியும் இந்தியா 'ஏ' அணியில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) விருப்பம் தெரிவித்துள்ளது.
திடீர் ஓய்வு அறிவிப்பு...
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை வெற்றிக்குப் பிறகு, சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக, யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். 20 ஓவர் மற்றும் டெஸ்ட்களில் ஓய்வுபெற்ற போதிலும் இருவரும் இந்திய அணிக்காக தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.
ஒருநாள் தொடரில்....
இந்திய அணி அடுத்து ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியிலும், அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும் ஆடுகிறது. இதன் பிறகுதான் இந்தியாவுக்கு ஒருநாள் போட்டி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை (பொ்த், அடிலெய்டு, சிட்னி) 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இடம் பெறுவார்கள்.
இந்தியா ஏ அணியில்...
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு ரோகித்சர்மாவும், விராட்கோலியும் இந்தியா 'ஏ' அணியில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா 'ஏ'-ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையேயான 3 போட்டிகள் செப்டம்பர் 30, அக்டோபர் 3 மற்றும் 5-ம் தேதிகளில் கான்பூரில் நடக்கிறது. இருவரும் ஆட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. வலியுறுத்தி உள்ளது. இதே போல் விஜய் ஹசாரே போட்டியில் விளையாடலாம் என கூறப்படுகிறது.
முடியும் தருவாயில்....
விராட் கோலி ஒருநாள் போட்டியில் 14,181 ரன்னும் (51 சதம், 74 அரை சதம்), ரோகித்சர்மா 11,168 ரன்னும் (32 சதம், 58 அரை சதம்) எடுத்துள்ளனர். இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


