Idhayam Matrimony

13-வது மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும்: மிதாலி ராஜ்

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Mithali-Raj 2025-08-12

Source: provided

மும்பை : இந்தியாவில் நடைபெறவுள்ள 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று இந்திய மகளிரணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

4-வது முறையாகும்....

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும். இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

கேப்டன் மிதாலி ராஜ்... 

உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருப்பதை குறிக்கும் கவுண்ட்டவுன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறியதாவது, கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணி டி20 போட்டிகளில் மட்டுமில்லாமல், ஒருநாள் போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது.

சிறப்பான வாய்ப்பு... 

அவர்களது சொந்த மண்ணிலேயே இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால், இந்திய அணிக்கு இதைவிட சிறப்பான வாய்ப்பு கிடைக்காது என நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து