எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : தெருநாய்கள் தொடர்பான உத்தரவு தொடர்பான வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று முன் தினம் நடந்த விசாரணையின்போது, தெருநாய்கள் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் என அனைத்து தரப்பினரையும் குறிவைக்கின்றன. தெருநாய் கடியால் பச்சிளம் குழந்தைகள் உள்பட பலருக்கும் ரேபிஸ் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், தலைநகர் டெல்லியில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்.
தற்போதைக்கு அடுத்த 8 வாரங்களுக்குள் 5 ஆயிரம் தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதற்காக டெல்லி யூனியன் பிரதேச நிர்வாகம் உடனடியாக தெருநாய்களை அடைத்து வைப்பதற்கான காப்பகங்களை அதிகரிக்க வேண்டும். தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும்,அதிகாரிகள் தெருநாய்களை பிடிப்பதற்கு எதிராக தனிநபர்களோ, அமைப்புகளோ குறுக்கே வந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை விலங்குகள் நல ஆர்வளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தெருநாய்கள் தொடர்பாக 2 நீதிபதிகள் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நல ஆர்வலர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனு இன்று காலை விசாரணைக்கு வர உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


