Idhayam Matrimony

காஷ்மீரில் மேகவெடிப்பு - 33 பேர் பலி

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2025      இந்தியா
Jammu---Rain-2025-08-14

காஷ்மீர், ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி சுமார் 33 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிஷ்த்வார் மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் 9,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சஸோட்டி கிராமத்தில், இன்று (ஆக.14) மதியம் 33 மணியளவில் மேகவெடிப்பு ஏற்பட்டு திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கிஷ்த்வாரில், மலை மீது இருக்கும் மசாயில் மாதா கோயிலுக்கு, செல்லும் வழியில் அமைந்துள்ள கடைசி கிராமம் சஸோட்டி. அங்கிருந்து சுமார் 8.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியான 33 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பேரிடரால் பலியானோரது எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் மசாயில் மாதா கோயிலை நோக்கி நடத்தப்படும் புனித யாத்திரை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டதுடன், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கிஷ்த்வாரில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்துடன், அப்பகுதியில் அமைந்திருந்த ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவதுமாக நிறைவடைய சுமார் 20 நாள்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து