Idhayam Matrimony

தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரை: இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் நரேந்திரமோடி

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2025      இந்தியா
Pm-modi-1-2025-08-15

புதுடெல்லி, தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றியதன் மூலம் இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் நரேந்திரமோடி முறியடித்துள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தநிலையில், தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-வது முறையாக பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியாவின் வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, ஜிஎஸ்டி வரி குறைப்பு, விவசாயிகள் நலன் ஆகியவற்றைப் பற்றி பேசினார். அவர் மொத்தமாக 103 நிமிடங்கள் இன்று உரையாற்றினார். இது பிரதமர் மோடியின் நீண்ட உரையாகும். மோடி, கடந்த 2014-ல் 98 நிமிடங்கள் 2016ல் 96 நிமிடங்கள் பேசியிருந்தார். இன்றைய உரையின் மூலமாக பிரதமர் மோடி, அவரது சாதனையையே முறியடித்துள்ளார். (ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் ஆகும்)

மேலும் தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றி இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திரா காந்தி, தான் பிரதமராக இருந்த காலத்தில் 11 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார். அதிகபட்சமாக இந்தியாவில் 17 முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பெருமை நேருவைச் சேரும். இந்தியா விடுதலை பெற்ற பிறகு முதல் சுதந்திர தினத்தன்று இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு 72 நிமிடங்கள் நீண்ட உரையாற்றினார். 2015-ம் ஆண்டு 88 நிமிடங்கள் உரையாற்றி நேருவின் சாதனையை முறியடித்தார் பிரதமர் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து