எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 2024 பாராளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தந்தது எப்படி என்று அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்விஎழுப்பியுள்ளார்.
கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதல்-அமைச்சர் புறக்கணித்து வருகிறார் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம்.அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். 2024 பாராளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தந்தது எப்படி? அன்புமணி சொல்வது போலத் தருமபுரியைப் புறக்கணித்திருந்தால், இந்த வெற்றி சாத்தியம் ஆகியிருக்குமா? இந்தக் கணக்குகூட தெரியாமல் அன்புமணி, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என அவதூறுகளை அள்ளி தெளித்திருக்கிறார்.
தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள். காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துங்கள்எனச் சொல்லியிருக்கிறார். சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஓர் இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம். தன் இயலாமையை மறைக்க இருப்பை தக்க வைத்துக் கொள்ள, தருமபுரியைப் பகடைக்காயாய் பயன்படுத்துகிறார். எந்தப் பாகுபாடும் காட்டாமல் தருமபுரியைச் சமதருமபுரியாகத்தான் திராவிட மாடல் அரசு நடத்துகிறது. அதனை வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவு காட்டும்.
தருமபுரி - மொரப்பூர் ரெயில் பாதை திட்டத்திற்காக ஒரு கைப்பிடி மண் கூட கையகப்படுத்தப்படவில்லை என்று சொல்லியிருக்கிறார் அன்புமணி. மொரப்பூர் - தருமபுரி புதிய அகல ரெயில் பாதை திட்டத்திற்கான நிர்வாக அனுமதி 17.04.2023 அன்று வழங்கப்பட்டு, கடந்த வருடம் மட்டும் 78.54 ஹெக்டேரில் 54.14. ஹெக்டேர் நில எடுப்புக்காக அறிவிக்கை செய்யப்பட்டது. 60 விழுக்காடு நில எடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. புறம்போக்கு நிலங்கள் 13.72.0 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 2000 பட்டாதாரர்களுக்கு இதுவரை ரூ.29 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24.40.02 ஹெக்டர், ரயில் நிலையம் மூக்கனூரில் அமைவது குறித்துத் திருத்திய நில அட்டவணை தயாரிக்கும் பணியில் உள்ளது. நில எடுப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
மத்திய அரசின் ரெயில்வே திட்டங்களில் கூட தமிழ்நாடு அரசைக் குறை சொல்லும் அன்புமணி என்றைக்காவது மோடி அரசைப் பற்றி விமர்சனமாவது வைத்திருக்கிறாரா? மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தைகூட இடம்பெறவில்லை. அதையாவது கண்டித்திருக்கிறாரா? “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் 25 எம்.பி.க்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும் என்று இறுமாப்புடன் சொன்னார் அன்புமணி ராமதாஸ்.
தருமபுரி காவிரி உபரி நீர்த் திட்டத்தைப் பொறுத்தவரையில் காவிரி வடிநிலப் பகுதியிலிருந்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாசனப் பரப்பைத் தவிரப் புதியதாகப் பாசனப்பரப்பைக் காவிரி வடிநிலத்தில் உருவாக்க இயலாது எனக் காவிரி நதிநீர் பங்கீட்டுத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. காவிரி வடிநிலத்தின் உபரிநீரைப் பிற வடிநிலத்திற்கு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளின் தீர்ப்பு கிடைத்த பின்னரே காவிரியில் நீரேற்று திட்டங்களைக் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இயலும். இவையெல்லாம் தெரிந்தும் தருமபுரி மக்களை ஏமாற்றுவதற்காக வெற்று நாடகம் போட்டிருக்கிறார் அன்புமணி.
சிப்காட் தொழிற் பூங்கா திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று சொல்லி இருக்கிறார் அன்புமணி. தருமபுரி தொழிற் பூங்காவிற்கு ஆரம்பக்கட்டப் பணிகளான அணுகு சாலை மற்றும் நுழைவாயில் தகவல் பலவை, தெரு விளக்குகள் மற்றும் இதர பணிகள் அமைக்கும் பணி ரூ. 12.39 கோடி திட்ட மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 200 ஏக்கர் பரப்பளவில் உட்கட்டமைப்பு பணிகள் ரூ. 93 கோடிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இணையதளம் மூலமாக 200 ஏக்கர் நிலத்தில் தொழில் முனைவோர்களுக்காக நிலம் ஒதுக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏழு தொழில் நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, தன் கட்சியிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் இடமில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அன்புமணி இனியாவது விவரங்களை அறிந்து பேச வேண்டும். அல்லது அவரது சொந்தக் கட்சி பதற்றம் தீரும் வரை இப்படி அரைவேக்காட்டு அறிக்கை விடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
17 Aug 2025சென்னை : சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
-
குப்பை அள்ளும் பணியில் இருந்து தூய்மை பணியாளர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி : திருமாவளவன் ஆவேசம்
17 Aug 2025சென்னை : தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் என்பது சமூக நீதி அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி என்று வி.சி.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-08-2025.
17 Aug 2025 -
காஷ்மீரில் மீண்டும் துயரம்: நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
17 Aug 2025கதுவா : ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.
-
அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தை: புதினிடம், மெலனியாவின் கடிதத்தை வழங்கிய ட்ரம்ப்
17 Aug 2025அமெரிக்கா : அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழகத்தில் விரைவில் முடியும் தருவாயில் உள்ள 24 ரயில் நிலைய பணிகள்: பிரதமர் திறந்து வைக்கிறார்
17 Aug 2025சென்னை, : தமிழகத்தில் மொத்தம் 24 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி இந்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது.
-
ரூ.11 ஆயிரம் கோடி பிரமாண்ட நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
17 Aug 2025புதுடெல்லி : டெல்லியில் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பில் 2 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
-
ஆழியார் அணையில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றம்
17 Aug 2025பொள்ளாச்சி : ஆழியார் அணையில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
-
திருமாவளவனின் சித்தி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
17 Aug 2025சென்னை : அரியலூர் மாவட்டம் அங்கனூரை சேர்ந்தவர் திருமாவளவன் (63).
-
இணைய வழியில் விண்ணப்பித்த உடனே விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் புதிய திட்டம் : தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
17 Aug 2025தருமபுரி : விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
-
தருமபுரிக்கான பல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தான் தொடங்கப்பட்டவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Aug 2025தருமபுரி : தருமபுரியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறுவோரை நம்பாதீர்கள் : அருண் ஐ.பி.எஸ். எச்சரிக்கை
17 Aug 2025சென்னை : மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பாதீர்கள் என்று ஐ.பி.எஸ். அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.
-
தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவை கண்டித்து விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி
17 Aug 2025திருச்சி : சுப்ரீம் கோர்ட் உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.
-
வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் மாபெரும் பேரணியை தொடங்கினார் ராகுல்
17 Aug 2025டெல்லி : வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் மாபெரும் பேரணியை ராகுல்காந்தி நேற்று தொடங்கினார்.
-
திருமாவளவனுக்கு முதல்வர் வாழ்த்து
17 Aug 2025சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லா தாயகம் திரும்பினார் : டெல்லி முதல்வர் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பு
17 Aug 2025டெல்லி : சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லா இந்தியா திரும்பினார்.
-
சிறப்பு பொதுக்குழுவில் பா.ம.க. தலைவராக ராமதாஸ் தேர்வு : 37 தீர்மானங்கள் நிறைவேற்றம்
17 Aug 2025விழுப்புரம் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
-
2024 பாராளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தந்தது எப்படி - அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி
17 Aug 2025சென்னை : 2024 பாராளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை தி.மு.க.
-
திருமாவளவனுக்கு பா.ரஞ்சித் பிறந்தநாள் வாழ்த்து
17 Aug 2025சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தின் சிறப்பு : கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
17 Aug 2025சென்னை : சந்த் ஸ்ரீ மவுலி த்யானேஷ்வர் மஹராஜின் 750-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்ற கவர்னர் ஆர்.
-
பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கி சூடு
17 Aug 2025சண்டிகர்: அரியானாவின் குருகிராமை சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் வீட்டில் நேற்று அதிகாலை துப்பாக்கி சூடு நடைபெற்றது.
-
த.வெ.க. 2-வது மாநில மாநாடு: பாரபத்தியில் குடிநீர் மேலாண்மைக்குழு அமைப்பு
17 Aug 2025மதுரை: தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டையொட்டி மதுரை பாரபத்தியில் குடிநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
தமிழக வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் கவர்னர் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கு
17 Aug 2025தருமபுரி: தமிழக வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் செய்கிறார் கவர்னர் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தொடர் விடுமுறை எதிரொலி: திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
17 Aug 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்த
-
கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? வதந்தியை பரப்பாதீர்கள் அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
17 Aug 2025சென்னை: கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? வதந்தியை பரப்பாதீர்கள் என்று அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.