Idhayam Matrimony

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM-Rajnath 2025-08-18

Source: provided

சென்னை : குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆரவு கோரினார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் விரிவான ஆலோசனைக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனின் பெயரை பா.ஜ.க. தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா அறிவித்தார்.

அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக குடியரசு துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட வேண்டும் என்றும் இதுதொடா்பாக எதிா்க்கட்சிகளிடமும் ஆலோசித்திருப்பதாக நட்டா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை காலை ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு திமுகவிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தில்லியில்  ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து