Idhayam Matrimony

தெலுங்கானாவில் சோகம்: பண்டிகை கொண்டாட்டத்தில் மின்கம்பி உரசியதில் 9 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2025      இந்தியா
Telangana 2025-08-19

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானாவில் நடைபெற்ற பண்டிகை கொண்டாட்டத்தில்  மின்கம்பி உரசியதில் இதுவரை  9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானாவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடந்த திருவிழா கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட மின் விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி, ஐதராபாத் மற்றும் காமாரெட்டி மாவட்டங்களில் பலர் உயிரிழந்து உள்ளனர். இதில், ஐதராபாத் நகரில் ஆம்பர்பேட்டை பகுதியில், விநாயக மண்டபம் அமைக்கும்போது ஒருவர் பலியானார். பந்தலகுடா பகுதியில் சிலையை தூக்கி சென்றபோது, மின்கம்பி உரசியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

இதுதவிர மற்றொரு சம்பவத்தில், ராமந்தப்பூரில் கடவுள் கிருஷ்ணரின் தேரை இழுத்து சென்றபோது, மின்கம்பி உரசியதில் 5 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதேபோன்று, காமாரெட்டி மாவட்டத்தின் ஆரேபள்ளி பகுதியில், விநாயகர் சிலையை தூக்கி சென்ற லட்சுமி நாராயணா (வயது 25) என்பவர் மின்கம்பி உரசியதில் பலியானார். பண்டிகை கொண்டாட்டத்தின்போது, மின்கம்பி உரசி 2 நாட்களில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து