எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தேசிய சீனியர் தடகள 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம் பெற்றார்.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 64-வது தேசிய சீனியர் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. 24-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான இறுதி தேர்வு என்பதால் இந்தப் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை 10 ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயம் நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச வீரர் அபிஷேக் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 30 நிமிடம் 56.54 வினாடியில் கடந்தார்.
கர்நாடகாவை சேர்ந்த சிவாஜி பர்சு மடப்பகோதரா 30 நிமிடம் 57.69 வினாடியில் கடந்து 2-வது இடத்தையும், மற்றொரு உத்தரபிரதேச வீரர் ஷிவம் 30 நிமிடம் 59.14 வினாடியில் கடந்து 3-வது இடத்தையும் பிடித்தனர். அதைத் தொடர்ந்து தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
நேற்று மாலை ஆண்களுக்கான போல் வால்ட், பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் (4 கிலோ), டிரிபிள் ஜம்ப், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.
அதோடு பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டமும் (இரவு 7.25), ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டமும் (இரவு 7.35) நடக்கிறது. மொத்தம் 6 பதக்கத்துக்கான போட்டிகள் மாலை முதல் இரவு வரை நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


