முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்சோ சட்ட வழக்குகளில் வயது வரம்பை 16 ஆக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      இந்தியா
Supreme-Court 2025-08-20

Source: provided

புதுடெல்லி : போக்சோ’ சட்ட வழக்குகளில், 16 ஆக குறைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலியல் உறவுக்கு பரஸ்பர சம்மதம் தெரிவிப்பதற்கான வயது வரம்பு 18 ஆக உள்ளது. அதை ‘போக்சோ’ சட்ட வழக்குகளில், 16 ஆக குறைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், இந்த வயது 18 ஆக நீடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- தற்போது ஆண்-பெண் சேர்ந்து படிக்கும் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் ஒருவர்மீது ஒருவர் காதல் கொள்கின்றனர். காதலை குற்றமென்று உங்களால் சொல்ல முடியுமா?.

கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்களையும், உண்மை காதலையும் நாம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். உண்மை காதலர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதை குற்ற வழக்குகள் போலவே நடத்தக்கூடாது. ‘போக்சோ’ வழக்குகளில் பெண்ணின் பெற்றோர் அளிக்கும் புகார்களால் சிறைக்கு அனுப்பப்படும் பையன்கள் மனஉளைச்சல் அடைகிறார்கள். இதுதான் சமுதாயத்தின் கசப்பான யதார்த்தம். இருவரும் ஓடிப்போனதை மூடி மறைக்கவும் ‘போக்சோ’ சட்ட புகார்கள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து வழக்கு விசாரணையை 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து