முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2025      உலகம்
Central-government 2021 12-

Source: provided

மாஸ்கோ: வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தப்பட்டது.

இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சார ஒத்துழைப்புக்கான இந்தியா - ரஷ்யா அரசுகளுக்கு இடையேயான ஆணையத்தின் 26-வது கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது. ரஷ்ய முதல் துணை பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் தலைமையிலான குழுவுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்ததை அடுத்து, பிற நாடுகளுடனான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பின்னணியில், மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. 2021-ல் 13 பில்லியன் டாலராக இருந்த இந்திய-ரஷ்ய வர்த்தகம், 2024-25-ல் 68 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. 2021-ல் 6.6 பில்லியன் டாலராக இருந்த வர்த்தக பற்றாக்குறை தற்போது கிட்டத்தட்ட 59 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த பற்றாக்குறையை நாம் அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும்.

இந்தியா அதிக வர்த்தகம் செய்வதற்கு ஏற்ப ரஷ்யா தனது சந்தையை இன்னும் அகலமாக திறக்க வேண்டும். அதிக வர்த்தகத்தில் ஈடுபடுவதும் அதற்காக நாம் அதிகமாகச் செய்வதும் நமது மந்திரமாக இருக்க வேண்டும். 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி விரைவாக முன்னேற வேண்டும்.

கட்டணங்கள், கட்டணமில்லா தடைகள், தளவாடங்களில் உள்ள தடைகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம், சென்னை - விளாடிவோஸ்டாக் வழித்தடம் ஆகியவற்றின் இணைப்பை ஊக்குவிக்க வேண்டும். சுமுகமான கட்டண வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து