முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி பிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2025      இந்தியா
America-Judge-2025-08-21

Source: provided

அமெரிக்கா: உலகின் மிகவும் கனிவான நீதிபதி என மக்களால் அறியப்பட்ட நீதிபதி பிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மாநகராட்சி நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (வயது 88). அந்நாட்டின், காட் இன் பிரோவிடென்ஸ் எனும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர் விசாரிக்கும் போக்குவரத்து வழக்குகள் ஒளிப்பரப்பட்டு வந்தன.

அப்போது, இவர் விசாரித்த வழக்குகளில், சூழ்நிலைக் காரணமாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டோருக்கு, தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலைச் செய்ததுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை பெருவதற்கும் வழி வகைச் செய்து வந்தார்.

இதனால், மக்களிடையே மிகவும் பிரபலமான நீதிபதி ஃபிராங், கடந்த சில மாதங்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நீதிபதி பிராங் கேப்ரியோ, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். நீதிபதி பிராங் கேப்ரியோவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து