முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவைகள்: மேயர் பிரியா தொடக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Priya

Source: provided

சென்னை : தமிழக அரசின் 50 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக மக்கள் பயன்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின்படி, வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவை வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில், வாட்ஸ்ஆப் மூலம் சொத்து வரி, தொழில் வரி, பிறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட சேவை களைப் பெற முடியும். இதற்காக சென்னை மாநகராட்சி 94450 61913 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

புதிய திட்டம்

அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழக மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில் இந்த திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு எண் மூலம் அணுகக்கூடிய இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டு, முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும் தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகளை பெற முடியும் என்று இந்த திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம், குடிநீர் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்துவது,வரி செலுத்துவது, மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த ஒரே சாட்பாட்டின் மூலம் பெற முடியும்.

ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அலுவலகத்துக்கு மக்கள் அலைவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து