Idhayam Matrimony

இந்தியா - பாக் மோதலின்போது 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீண்டும் ட்ரம்ப் சர்ச்சைப் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      உலகம்
trump 2024-12-30

வாஷிங்டன், கடந்த மே மாதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மோதலின் போது  ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறினார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் போது, ​​இந்தியா ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார். ஐந்து ஜெட் விமானங்களைத் தவிர, ஒரு பெரிய வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு விமானமும் அழிக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று வாஷிங்டன்னில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி அணு ஆயுதப் போரை தடுத்தேன். இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அணு ஆயுதப் போராக மாறக்கூடிய கட்டத்தில் இருந்தது. அவர்கள் ஏற்கனவே 7 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினர், நிலைமை தீவிரமாக இருந்தது.

அப்போது நான் சொன்னேன், 'நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து சண்டையிட்டால் நாங்கள் உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்யமாட்டோம். எனவே போரை நிறுத்த 24 மணிநேரம் தருகிறேன்' என்றேன். அவர்கள் இனி போர் நடக்காது என்றார்கள்.” என்றார். தற்போது ட்ரம்ப் 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், எந்த நாடு எத்தனை விமானங்களை சுட்டு வீழ்த்தியது என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து