எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
முசாபர்பூர் : 'பா.ஜ.க. எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். மக்களின் வாக்குரிமையை பறித்த பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்' என பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
ராகுல் யாத்திரை....
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பீகாரில் 1,300 கிலோ மீட்டர் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
16 நாட்கள் தோடர்...
ஆகஸ்ட் 17-ம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாட்கள் தொடர் யாத்திரை, செப்டம்பர் 1-ம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், சி.பி.எம்.எல். தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.
முசாபர்பூரில் முதல்வர்...
நேற்று முசாபர்பூரில் நடைபெற்ற யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருடன் திறந்த காரில் சென்று மக்களை சந்தித்தார்.
ஆதரளிக்கவே நான்...
இதனை தொடர்ந்து முசாபர்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டுக்கு எதிராக என் சகோதரர்களுக்கு ஆதரளிக்கவே நான் வந்துள்ளேன். வாக்கு திருட்டை ராகுல் காந்தி வெளிக்கொண்டு வந்துள்ளார். இதற்கு தலைமை தேர்தல் ஆணையரால் முறையாக பதில் சொல்ல முடியவில்லை.
அவருக்கு பயம் இல்லை...
ஆனால், ராகுல் காந்தி உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையர் சொல்கிறார். இதற்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா?. ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும், கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது.
மக்கள் பறிப்பார்கள்...
ராகுல் காந்தி அரசியலுக்காக பேச மாட்டார், உண்மையை கவனத்தோடு பேசுவார். பா.ஜ.க. எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில்தான் பா.ஜ.க. இப்படி நடந்துகொள்கிறது. மக்களின் வாக்குரிமையை பறித்த பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்.
ஜனநாயக படுகொலை...
பா.ஜ.க. கூட்டணி தோற்றுவிடும் என்ற பயத்தில் மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணில் பிறந்து வளர்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதை விட பயங்கரவாதம் இருக்கமுடியுமா?.
பீகார் மக்களின் பலம்..
ராகுலும், தேஜஸ்வியும் பெறப்போகும் வெற்றியை தடுக்க முடியாத பா.ஜ.க., கொல்லைப்புறம் வழியாக வாக்காளர்களை நீக்குகிறது. இப்போது இந்தியாவே பீகாரை பார்த்துக்கொண்டிருக்கிறது. பீகார் மக்களின் பலம், ராகுலும், தேஜஸ்வியும்தான்.
ஜனநாயகம் காக்க...
இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்காக போர்க்குரலை பீகார் எழுப்பியுள்ளது. இதுதான் வரலாறு. இப்போது அதே பணியை ராகுலும், தேஜஸ்வியும் பீகாரில் செய்கின்றனர். ராகுல், தேஜஸ்வி நட்பு, அரசியல் நட்பு அல்ல. உடன்பிறப்புகளின் நட்பு. ஜனநாயகம் காக்க ஒன்று சேர்ந்துள்ளனர். உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரப்போவது இந்த நட்புதான். தேர்தலுக்கு முன்பே உங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. அதனால்தான் இந்த வெற்றியை தடுக்க பார்க்கிறார்கள்” என்றார்
களவாடப்பட்ட ஒவ்வொரு வாக்கின் கனத்தையும் பீகார் மண்ணில் உணர முடிகிறது. அன்பு இளவல்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருடன், மக்களின் வலியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத ஆற்றலாக மாற்றும் வாக்கு அதிகாரப் பயணத்தில் நானும் இணைந்தேன். - முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


