எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம் தொடர்பான அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்க வழிவகை செய்யும் வகையில் கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை அரசே ஏற்கிறது. மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த சட்டத்தின்படி நடப்பு கல்வியாண்டுக்கு இதுவரை சேர்க்கை தொடங்கப்படவில்லை.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஈஸ்வரன் என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி விசாரித்த நீதிபதிகள், தமிழகத்துக்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, நிதி கிடைக்கவில்லை என்று காரணம் கூறி, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழ்நாடு அரசு வழங்காமல் காலம் தாழ்த்த கூடாது. உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினர்.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (திங்கட்கிழமை) விசாரிக்கிறது. இதற்கிடையே தனது தரப்பு கருத்தையும் கேட்க கோரி ஈஸ்வரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


