Idhayam Matrimony

மிசோரம் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் ரயில் பாதை: பிரதமர் செப்.13-ல் திறந்து வைக்கிறார்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2025      இந்தியா
Modi 2024-09-15

Source: provided

ஐஸ்வால் : மிசோரம் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் புதிதாக ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி திறந்து வைக்கிறார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடைசி எல்லையில் இருக்கும் மாநிலம் மிசோரம். இம்மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 91 சதவீதம் காடுகள்தான். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனபோதும் மிசோரம் தலைநகர் ஐஸ்வால் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்படவில்லை. 

மிசோரமின் ஒரு பகுதியான பைராபி வரை மட்டுமே ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து பைராபி வரையிலான இவ்வழித்தடம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம்தான் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வழித்தடத்தின் ரயில் பாதை சுமார் 103 கிலோமீட்டர் என்ற போதிலும் அசாம் மாநில எல்லைக்குள்தான் இவ்வழித்தடத்தின் பெரும்பாலான பகுதி உள்ளது. மிக குறைந்த தூரம் மட்டுமே மிசோரம் மாநில எல்லையில் இருந்தது. இந்தியாவில் ‘குறைவான ரயில்பாதை கொண்ட மாநிலம் மிசோரம்' என்ற பெயரும் இருந்தது.

அதைப்போக்கும் வகையில், மிசோரத்தின் பைராபி முதல் சாய்ராங் இடையே 51.38 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைத்து மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலை இணைத்து ரயில் போக்குவரத்து பட்டியலில் அதனை கொண்டுவர 1999-ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. சாய்ராங், மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலுக்கு மிக அருகில்தான் உள்ளது. ஆனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர், 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றவுடன், அதே ஆண்டு நவம்பர் 29-ந்தேதி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தை அமைப்பதற்கு நடைமுறையில் உள்ள சிக்கல்கள், பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி எப்படியாவது நடைமுறைக்கு கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டது.

இதன் காரணமாக இத்திட்டத்துக்கான 51.38 கிலோமீட்டர் தூர ரயில் பாதையில், 5 ரயில்நிலையங்கள், 12.48 கிலோமீட்டர் நீளமுள்ள மலைகளை குடைந்து 48 சுரங்கப்பாதைகள், 55 உயரமான பாலங்கள், 87 சிறிய பாலங்கள், 5 சாலை மேம்பாலங்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் சாய்ராங் ரயில்நிலையம் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரூ.8,071 கோடி செலவில் இந்த ரயில் பாதையை ரயில்வேத்துறை நேர்த்தியாக வடிவமைத்து சாதனை புரிந்துள்ளது. இந்தப்பாதை ஐஸ்வாலை அசாமின் சில்சார் நகரத்துடனும், நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கும். இந்த ரயில் நிலையத்தை வரும் 13-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து