Idhayam Matrimony

நீலகிரி: வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் : வனத்துறை சோதனையில் அதிர்ச்சி

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2025      தமிழகம்
Jail

Source: provided

நீலகிரி : வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கீழ் சேலதா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வித்தியாசமான செடிகளை வளர்த்து வருவதாகவும், அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்குத் தகவல் தெரித்திருக்கிறார்கள்.

சம்மந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் குழுவாகச் சென்று சோதனை செய்துள்ளனர். வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் காய வைத்த மான் இறைச்சி கத்தி போன்றவற்றையும் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னணி குறித்துத் தெரிவித்த வனத்துறையினர், "தேனாடுகம்பை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 64 வயதான கண்ணன் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் ரகசியமாக 12 கஞ்சா செடிகளை வளர்த்து வந்திருக்கிறார். அதோடு 300 கிராம் கஞ்சாவும் வைத்திருந்தார்.என தெரிவித்தனர் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து