Idhayam Matrimony

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 10 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2025      தமிழகம்
Fisher-Boat

ராமேசுவரம், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 7-ந்தேதி விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 10 பேரும் வழக்கு விசாரணைக்காக நீர்க்கொழும்பு அருகே உள்ள வெளிச்சுரா கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிபதி, 10 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை கட்டத்தவறினால் 18 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து 10 மீனவர்களும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை பணம் தலா ரூ.5 கோடி அபராதம் என்பது, இந்திய மதிப்பில் தலா ரூ.1 கோடியே 46 லட்சம் என்பதாகும்.இவ்வளவு அதிகமான தொகையை பாம்பன் மீனவர்களுக்கு அபராதமாக இலங்கை கோர்ட்டு விதித்தது, அவர்களுடைய குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கோர்ட்டு விதித்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்டுக்கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து