Idhayam Matrimony

பா.ஜ.க. உட்கட்சி பூசல்களை தவிர்க்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2025      இந்தியா
Amit-Shah 2023-11-17

Source: provided

புதுடெல்லி : பா.ஜ.க. உட்கட்சி பூசல்களைதவிர்க்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி கிருஷ்ணா மேனன் சாலையில் உள்ள அமித்ஷா இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் உட்கட்சி பூசல்களை களைவது எப்படி?, 2026 சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம், தொகுதி பங்கீடு, தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. வலுவாக இருக்கிறது? அதிமுக உடனான கூட்டணி விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் , தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்குஅமித் ஷா அறிவுரை வழங்கினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்கள் அதிகரிப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக அவசியம்.கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிகமிக நல்லது என்றார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து