Idhayam Matrimony

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பணிகளுக்கு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2025      தமிழகம்
Metro-train 2023 05 02

சென்னை, விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் பணிக்கு தமிழ்நாடு அரசு  ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 445 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தமிழக அரசு முன்னதாக அனுமதி வழங்கியது.

சென்னை விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிலையில், விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் பணிகளுக்காக தமிழக அரசு முதற்கட்டமாக தற்போது ரூ.1,964 கோடியை ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து