முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: கூடுதலாக 2,500 பேருக்கு ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      தமிழகம்
DCM-1 2025-09-05

Source: provided

சென்னை : நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் கூடுதலாக 2,500 கலைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 10 நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் சார்பாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக நலிந்த கலைஞர்களுக்கு மாதம் தோறும் 3,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 6,542 நலிந்த கலைஞர்கள் மாதம் தோறும் 3,000 ரூபாய் நிதியுதவி பெற்று பயனடைந்து வருகின்றார்கள். முதல்வர் நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், நிதியுதவி பெற விண்ணப்பித்துள்ள தகுதி வாய்ந்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நிதியுதவி வழங்கிடும் வகையில், 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இத்திட்டத்திற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தெரிவுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தகுதிவாய்ந்த 2,500 நலிவுற்ற நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கிட ஆணைகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று (5.9.2025) முகாம் அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்வில் நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் கூடுதலாக 2,500 கலைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 10 நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் விஜயா தாயன்பன், அருங்காட்சியங்கள் துறை ஆணையர் மற்றும் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கவிதாராமு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து