Idhayam Matrimony

செங்கோட்டையன் இன்னும் முழுதும் மனம் திறக்கவில்லை: திருமாவளவன்

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      தமிழகம்
Thirumavalavan 2024-12-16

மதுரை, செங்கோட்டையன் மனம் திறந்து பேசப்போவதாக சொன்னார்; ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்திற்கு அ.தி.மு.க.வில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

இது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம். அ.தி.மு.க. ஒருங்கிணைய வேண்டும் என கட்சிக்குள் இருக்கும் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளார். செங்கோட்டையன் மனம் திறந்து பேசப்போவதாக சொன்னார்; ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை. இது அவர் அளித்த பேட்டியில் இருந்து தெரியவருகிறது. யார்?.. யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்பதை செங்கோட்டையில் வெளிப்படையாக கூறலாம். அ.தி.மு.க.வை, ஒரு திராவிட இயக்கம்; பெரியார் இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து