முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் புதினுடன் பேச உள்ளேன் - டிரம்ப் கூறுகிறார்

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      உலகம்
Trump-Putin 2024-11-11

வாஷிங்டன், உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேர முயற்சித்ததால் கோபம் அடைந்த புதின் அந்த நாடு மீது போர் தொடுத்தார். குட்டி நாடான உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்று மனக்கணக்கு போட்ட புதினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால், ரஷியாவை எதிர்த்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் தொடர்ந்து நீடித்து வருவதால் சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன. மேலும் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், புதின் மற்றும் ஜெலன்ஸ்கியை அடுத்தடுத்து சந்தித்தார். எனினும், இந்த பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

சமீபத்தில், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் போது ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர்.

ஐரோப்பிய தலைவர்களுடன் ரஷியா நடத்தி வரும் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில், வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிர்வாகிகளுடன் அதிபர் டிரம்ப் ஆலோசித்த பிறகு நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, ரஷிய அதிபர் புடின் உடன் விரைவில் பேசுவீர்களா என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு, ''ஆம் நான் பேசுவேன்'' நாங்கள் ஒரு நல்ல உரையாடலைக் கொண்டிருக்கிறோம் என ஜனாதிபதி டிரம்ப் பதில் அளித்துவிட்டு புறப்பட்டு சென்றார். இதனால் உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து போருக்கும் முற்றுப்புள்ளி வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து