Idhayam Matrimony

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      தமிழகம்
Okanagal 2023 08 18

Source: provided

தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகா, கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு மீண்டும் நேற்று நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 25 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 18 ஆயிரத்து 461 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 693 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 18 ஆயிரத்து 942 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 37 ஆயிரத்து 403 கனஅடி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக வந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 32 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை இருமாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து