Idhayam Matrimony

ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2025      உலகம்
Afghanistan 2025-09-06

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆட்சி நடைபெற்ரு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், தலிபான்கள் அரசை ரஷ்யா தவிர வேறு எந்த நாடும் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில்தான், அடுத்த மாதம் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி இந்தியா வருகை தருவதாக இருந்தது. ஆனால், திடீரென அவரது பயணம் ரத்தாகியுள்ளது. 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளது. இதனால் அவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு விலக்கு பெற வேண்டும். தற்போது வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் இந்திய பயணத்துக்கு விலக்கு கிடைக்கவில்லை. எனவே அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வருகை நடந்திருந்தால், ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வருகை தரும் முதல் அமைச்சராக முத்தாகி இருந்திருப்பார். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மே 15 அன்று தலிபான் அமைச்சர் முத்தாகியுடன் தொலைபேசியில் உரையாடினார். தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவுக்கும், ஆப்கனுக்குமாக குறிப்பிடத்தக்க நிகழ்வாக அது இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து