Idhayam Matrimony

செங்கோட்டையன் மீதான நடவடிக்கை: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2025      தமிழகம்
OPS-2025-09--05

Source: provided

சென்னை : பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

அ.தி.மு.க. 2, 3 அணிகளாக பிரிந்ததில் இருந்து தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தோல்வியில் இருந்து விடுபட வேண்டுமென்றால் அ.தி.மு.க. இணைய வேண்டும் என்பது தொண்டர்கள், பொதுமக்களின் மனநிலையாக உள்ளது.

செங்கோட்டையனை அ.தி.மு.க. கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அ.தி.மு.க.வின் கட்டுப்பாட்டை மீறி நடந்தவர்கள் மீதுதான் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என கூறியவர்கள் மீது ஜெயலலிதா, எம்ஜிஆர் ஒருபோதும் நடவடிக்கை எடுத்ததில்லை. செங்கோட்டையனின் விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து