எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
குமரி : கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் கண்ணாடி பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். அத்துடன், கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்று செல்பி எடுப்பதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கண்ணாடி பாலத்தில் ஒரு இடத்தில் மட்டும் விரிசல் அடைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். இதனை தொடர்ந்து, கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, விரிசல் அடைந்துள்ள கண்ணாடியை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


