முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      இந்தியா
Air-India 2024 08 18

புதுடெல்லி, சிங்கப்பூர் செல்ல இருந்த  ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து பயணிகள் அவதியடைந்தனர்.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு 200 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு 11 மணிகு ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் விமானத்தில் மின்சார வினியோக அமைப்பு பழுதடைந்ததால் ஏ.சி சிஸ்டம் செயல்படவில்லை. இதனால் பயணிகள் கடும் வெப்பத்தால் மிகவும் சிரமப்பட்டனர். நீண்ட நேரமாகியும் பயணிகளுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை.

விமானத்தின் மின்சார வினியோக கோளாறும் சரி செய்யப்பட்டவில்லை. 2 மணி நேரத்துக்கு பிறகு விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு விமான நிலைய பயணிகள் அறையில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. 6 மணி நேரம் தாமதத்துக்கு பின்னர் நேற்று முன்தினம் அதிகாலை மாற்று விமானத்தில் பயணிகள் சிங்கபூர் அழைத்து செல்லப்பட்டனர்.இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துவதாக தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து