Idhayam Matrimony

காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      உலகம்
Bote 2023 08 13

Source: provided

கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு காங்கோவில் இந்த வாரம் நிகழ்ந்த இருவேறு படகு விபத்து சம்பவங்களில் சுமார் 193 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈக்குவேட்டர் மாகாணத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலையில் இந்த 2 படகு விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.

முன்னதாக கடந்த புதன்கிழமை, ஆற்றில் சென்று கொண்டிருந்த மோட்டார் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 86 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காணாமல் போனதாக தகவல் வெளியானது. இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை எதையும் அரசு வெளியிடவில்லை.

தொடர்ந்து வியாழக்கிழமை லுகோலேலா பகுதியில் காங்கோ ஆற்றில் சுமார் 500 பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்த படகு, எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து, பின்னர் நீரில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தை தொடர்ந்து மீட்புப் படையினர் விரைந்து சென்று 209 பேரை பத்திரமாக மீட்டனர்.

இந்த 2 படகு விபத்து சம்பவங்களிலும் மொத்தம் 193 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம் என்றும், முழு விவரங்களை அரசு வெளியிடவில்லை என்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அங்கு சாலை வழி பயணங்களை விட படகு பயணங்கள் மலிவானதாக இருப்பதால், ஏராளமானோர் படகுகளில் பயணிக்கின்றனர். ஆனால் படகுகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்பதாலும், அதிக எடை ஏற்றப்படுவதாலும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து