முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார். அதே போல அவர் எந்த வரிசையில் களமிறங்கினாலும் மிகவும் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்வார் எனவும் கோட்டக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “பாருங்க, சஞ்சு 5 அல்லது 6வது இடத்தில் அதிகம் பேட்டிங் செய்ததில்லை. ஆனால் அதற்காக அவரால் அதைச் செய்ய முடியாது என்று அர்த்தமல்ல. அதனால், சஞ்சு எந்த வரிசையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறமையான வீரர் என்று நான் நினைக்கிறேன். எனவே, அணியின் தேவைக்கேற்ப, கேப்டனும் தலைமை பயிற்சியாளரும் முடிவு செய்வார்கள். மேலும் அவர் எந்த வரிசையில் களமிறங்கினாலும் மிகவும் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்வார்” என்று கூறினார். 

__________________________________________________________________________________

லக்சயா சென் இறுதிக்கு தகுதி

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஹூங் ஹோம்பேயில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான லக்சயா சென், தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சவுடியென்-சென் உடன் மோதினார். 

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்சயா சென் 23-21 மற்றும் 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர் இறுதிப்போட்டியில் சீனாவின் லி ஷிபெங் உடன் மோத உள்ளார். 

__________________________________________________________________________________

இந்தியா - ஜப்பான் ஆட்டம் டிரா

11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜப்பானை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்தியா தரப்பில் பியூட்டி டங்டங்கும், ஜப்பான் தரப்பில் ஷிஹோ கோபயாகவாவும் கோல் அடித்தனர்.

இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்த ஆட்டத்தில் வெற்றி அல்லது டிரா செய்ய வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி டிரா செய்ததன் மூலம் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் உள்ளது. நேற்று நடைபெற்ற  2-வது ஆட்டத்தில் சீனா அணி தென் கொரியாவுக்கு எதிராக வெற்றி அல்லது டிரா கண்டால் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மாறாக சீனா தோல்வியடைந்தால் இந்திய அணி வெளியேறும். மறுபுறம் நடப்பு சாம்பியன் ஜப்பான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து