Idhayam Matrimony

பிளாக்மெயில் திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      சினிமா
Blackmail 2025-09-15

Source: provided

மருந்து கடை சப்ளையராக வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ் செய்யாத குற்றத்திற்காக தன் கடை உரிமையாளருக்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் மனைவி பிந்து மாதவியை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார் வில்லன் லிங்கா.  இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் பண தேவையை அறிந்துக் கொண்டு அவர் மூலம், தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் குழந்தையை கடத்த லிங்கா திட்டம் போடுகிறார். ஜி.வி.பிரகாஷ் குழந்தையை கடத்தினாரா? அவரது பணத்தேவை சந்திக்கப்பட்டதா? கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் இதற்கான விடைதான் பிளாக்மெயில் படத்தின் கதை. ஜி.வி.பிரகாஷ் வழக்கம் போல கதாபாத்திரத்தை உணர்ந்து எதார்த்தமாக நடித்திருக்கிறார். நாயகி தேஜு அஸ்வினியின் நடிப்பும் பாராட்டுக்குறியது. ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, சாஜி, ரெடின் கிங்ஸ்லி, முத்துகுமார், ரமேஷ் திலக் உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே.ரகம். எழுதி இயக்கியிருக்கும் மு.மாறன், குழந்தை கடத்தல் பின்னணியில் இரண்டு வெவ்வேறு பிளாக்மெயில் சம்பவங்களுக்கு திரைக்கதை அமைத்த விதம் விறுவிறுப்பாக மட்டுமின்றி யூகிக்க முடியாதபடி சிறப்பாக உள்ளது. ஆரம்பம் முதல் முடிவு வரை  படம் விறுவிறுப்பாக பயணிக்கும் அதே நேரத்தில் குழந்தை கடத்தலையே திரும்ப திரும்ப காட்டுவது போல் இருப்பதைத் தவிர்த்து இருந்தால் படம் பெரிய வெற்றி பெற்றிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து