எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஒற்றுமையாக இருந்து பிரிந்த இரண்டு கிராம மக்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதனால் கிராமத்தில் இருந்து வெளியேறி, வெளியூரில் வாழலாம் என்று நினைக்கிறார் நாயகன் அர்ஜூன் தாஸ், ஆனால், எந்த நிலையிலும் ஊரை விட்டு வெளியேறப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் காளி வெங்கட், திடீரென்று இறந்து விடுகிறார். அவரது இறப்பினால் ஊரே அதிர்ச்சியடைகிறது. அவரது உடலை ஒரு மரத்தடியில் எடுத்துச் சென்று வைக்க, இறந்தவரை சாமி என்று நம்பி, பிரிந்த ஊர் ஒன்றாக சேர்ந்து வணங்க தொடங்குகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘பாம் படம்’. அர்ஜூன் தாஸ், தனது நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸை பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கிறது.. காளி வெங்கட் பிணமாக நடித்து பட்டையை கிளப்பி இருக்கிறார். நாயகி சிவாத்மிகா, சிங்கம்புலி, கிச்சா ரவி, அபிராமி, பால சரவணன், நாசர், ராட்சசன் சரவணன் என அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். டி.இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் விஷால் வெங்கட், சாதியால் பிரிந்து கிடக்கும் ஊரை ஒன்று சேர்க்க போராடும் ஒருவரது வாயு காற்று எப்படி ஒன்று சேர்க்கிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், ‘பாம்’ ஒரு முறைப் பராக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


