Idhayam Matrimony

இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      உலகம்
Putin-2024-12-11

Source: provided

மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிபர் 50 சதவீத வரி விதித்தார். அமெரிக்காவின் மிரட்டலை கண்டுகொள்ளாத இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணை வாங்கி வருகிறது. இந்த இந்தியா - ரஷ்யா இடையே உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரஷ்யாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப் பாட்டை எடுத்துள்ளது. அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் இந்தியா உறுதியாக இருக்கிறது.

ரஷ்யா-இந்தியா இடையேயான நீண்டகால நட்பு கலாசாரம் உள்பட பல்வேறு விஷயங்களில் வேரூன்றி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையோன உறவை முறிக்க முடியாது. இதற்கான எந்தவொரு முயற்சியும் தோல்வி அடையும். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் முன்னேற்றம் கண்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து